கலுகமுவையிலிருந்து கலாகமுவை நோக்கி....
அஸ்ஸலாமு அலைக்கும்.... ஹிஜ்ரி 1442 வவ்வால் மாதம் 7ம் நாள் வெள்ளிக்கிழமை இரவு.... (2021.05.20 Thursday Evening) "கனவுகளை நனவாக்க வல்ல ஒரே கருவி கல்வி மட்டுமே" என்ற நியாயாதிக்கத்தோடு இதுவரைக்கும் கலுகமுவ அல்லது கலுகமுவை என அறியப்பட்ட எனதும் உனதும் அழகிய இக்கிராமம் அதற்கே உரிய எழில் மற்றும் சிறப்பியல்புகளோடு அரிய பல கலைகளையும் தன்னகத்தே வளர்த்துக் கொண்டு நம் நாட்டுக்கும் முழு உலகிற்கும் ஓர் முன்மாதிரியான "கலாகமுவை" கிராமமாக மிளிரும் வரை ....... மொழி, ஆளுமை, பண்பாடு, ஆரோக்கியம், கல்வி, வரலாறு மற்றும் அனைத்துப் பரப்புக்களிலும் நாம் சிறப்புத் தேர்ச்சி பெற்று முன்மாதிரி சர்வதேசப் பிரஜைகளாக மாறவேண்டும். முதற்கட்டமாக இலங்கையின் "பாடசாலை" யுடன் தொடர்பான கல்வி, நிர்வாகம், பாடவிதானம், நிதி நிர்வாகம், பாடசாலை அபிவிருத்திக் குழு, சட்டங்கள், சுற்றுநிருபங்கள், ஆசிரியர், பாடசாலை சமுகம், பாடங்கள், தேர்ச்சிகள், மாணவர்கள், மாணவர் பாதுகாப்பு ஏற்பாடுகள், மற்றும் தொடர்புடைய ஏனைய விடயங்...